காந்தியின் ரத்த வாரிசுகள்

காந்தியின் ரத்த வாரிசுகள்  (மகாத்மாவின் கதை தொடரின் பதினேழாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                  மகாத்மா காந்தி தேசத்தந்தை என்று புகழப்பட்டிருந்தாலும் அவரது பெயர் பிற்காலத்தில் குழப்பத்திற்கு உள்ளாகிவிட்டது. ஜவகர்லால் நேருவின் மகளான இந்திரா பிரியதர்சினி பார்சி (ஜொராஸ்டரியம்) சமயத்தைச் சார்ந்த பெஃரோஸ் காந்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆண்வழிச் சமூக வழக்கப்படி இந்திரா பிரியதர்சினி இந்திரா காந்தி ஆனார். அவரது இரு மகன்களுக்கு ராஜூவ் காந்தி, சஞ்சய் காந்தி எனப் பெயரிட்டார். நேருவின் மறைவுக்குப் பின்“காந்தியின் ரத்த வாரிசுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொலைச் சதியின் பாதை

கொலைச் சதியின் பாதை  (மகாத்மாவின் கதை தொடரின் பதினாறாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்            காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தியை அகில இந்திய வானொலி அறிவித்தது. இதன் பொருட்டு மதக்கலவரங்கள் தொடங்கி விடும் என்கிற அச்சம் உண்டானது. மக்களை அமைதிப்படுத்தும் பணியில் தலைவர்கள் இறங்கினர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே தான் கொலைகாரன் என பிரிட்டிஷ் வானொலி முதலில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய வானொலியும் இச்செய்தியை ஒலிபரப்பி மதமோதல்கள் நடக்காமல் தடுத்தன. இந்தியர்களின் வாழ்வின் ஒளி“கொலைச் சதியின் பாதை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மகாத்மாவின் இறுதி நாள்கள்

மகாத்மாவின் இறுதி நாள்கள் (மகாத்மாவின் கதை தொடரின் பதினைந்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்              சுதந்தர இந்தியாவில் காந்தி 168 நாள்கள் மட்டுமே வாழ்ந்தார். அதுவும் துயரம் நிரம்பிய வாழ்வாக அது அமைந்தது. சுதந்திரப் போரைவிட அதிக சக்தியுடனும் நம்பிக்கையுடனும் இந்து – முஸ்லீம் – சீக்கிய ஒற்றுமைக்காக களம் கண்டார். அவரது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. 1947 ஜூலை 15இல் தொடங்கி 1948 ஜனவரி 30 முடிய காந்தியின் இறுதி 200 நாட்களை இந்து நாளிதழில்“மகாத்மாவின் இறுதி நாள்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும்

இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும் (மகாத்மாவின் கதை தொடரின் பதினான்காவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்               இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் ஆலன் ஆக்டோவியன் ஹியூம் (Allan Octavian Hume) முயற்சியால் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். 1885 டிசம்பர் 28 பம்பாயில் நடந்த முதல் அமர்வில் உமேஷ் சந்திர பானர்ஜி முதல் தலைவராகத் தேர்வானார்.  அன்று காங்கிரஸ் தலைவர்கள் ராஷ்டிரபதி (President) என்றழைக்கப்பட்டார். ஆண்டுகொருமுறை புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. இந்த“இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் 

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் (மகாத்மாவின் கதை தொடரின் பதிமூன்றாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                காந்தி அரசியல் பணிகளுடன் சமூகப்பணிகளையும் இணைத்தே செயல்படுத்தினார். அரசியல் விடுதலையுடன் சமூக, பொருளாதார விடுதலையும் பெற வேண்டும் என்பதில் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். நிர்மாணத் திட்டங்கள் என்று பெயரில் பல்வேறு காலகட்டங்களில் இவற்றை முன்னெடுத்துச் சென்றார். கதர் பரப்புரை, மதுவிலக்கு, வார்தா (ஆதார) கல்வித் திட்டம், தீண்டாமை ஒழிப்பு, முதியோர் கல்வி, நலக்கல்வி, கிராம சுகாதாரம், கிராமத் தொழில்கள், பொருளாதார சமத்துவம், பெண்கள்,“காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் “-ஐ படிப்பதைத் தொடரவும்.

சட்ட மறுப்பும் உப்புச் சத்தியாகிரகமும்

சட்ட மறுப்பும் உப்புச் சத்தியாகிரகமும் (மகாத்மாவின் கதை தொடரின் பனிரண்டாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                1929 டிசம்பர் 31இல் ஜவகர்லால் நேரு தலைமையில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் சிந்துவின் துணை நதியாகிய ராவி ஆற்றங்கரையில் நேரு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அம்மாநாட்டில் 1930 ஜனவரி 26 இந்திய விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வோராண்டும் கொண்டாடப்பட்டது. வரிகொடா இயக்கம், உப்பு சத்தியாகிரகம், முழுப் புறக்கணிப்பு என பல்வேறு சட்டமறுப்பு இயக்கப் போராட்டங்களை“சட்ட மறுப்பும் உப்புச் சத்தியாகிரகமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும்

காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும் (மகாத்மாவின் கதை தொடரின் பதினொன்றாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                பஞ்சாப் உண்மையறியும் குழுவின் அறிக்கையை காந்தி மிகைப்படுத்தல்கள், சந்தேகத்திடமான சாட்சியங்கள் இல்லாத வகையில் தயாரித்தார். அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒவ்வொன்றும் நிருபிக்கப்பட்ட உண்மைகளாகும். சாட்சியங்களில் அய்யமிருந்தால் அவற்றை காந்தி அறிக்கையில் அனுமதிக்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டுவருவது மட்டும் குழுவின் நோக்கமாக இருந்தது. பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆளுகை நிலைக்க எத்தகைய காட்டுமிராண்டித்தனங்களிலும் ஈடுபடும் என்பதற்கு இந்த அறிக்கை சான்றாகும். அமிர்தசரஸ் காங்கிரஸ் நடவடிக்கைகளில் பங்குபெற்றதன்“காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சத்தியாகிரகமும் படுகொலையும்

சத்தியாகிரகமும் படுகொலையும் (மகாத்மாவின் கதை தொடரின் பத்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம் (Home Rule Movement 1916) விவசாயிகளிடம் விழிப்பை உண்டாக்கி இருந்தது. இதற்கு ஆங்கிலக் கல்வியும் காரணமாக அமைந்தது. கேதா (கேடா) சத்தியாகிரகம் உண்மையில் விவசாயிகள் வாழ்க்கையுடன் தங்களைத் தொடர்புப்படுத்திக்  கொள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. சத்தியாகிரகத்தின் முழுவெற்றி என்பது மக்களின் உள்ளார்ந்த பங்கேற்பில் இருப்பதை காந்தி உணர்ந்திருந்தார். இதன் உட்பொருளை முழுமையாக உணர்த்தி மக்களைத்“சத்தியாகிரகமும் படுகொலையும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள்

இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள் (மகாத்மாவின் கதை தொடரின் ஒன்பதாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             கோபாலகிருஷ்ண கோகலேவை காந்தி தனது அரசியல் குருவாக ஏற்கத் தொடங்கியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவைப் புரிந்துகொள்ள பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். பம்பாய் கவர்னர் காந்தியை சந்திக்க விரும்பும் செய்தியை கோகலே மூலம் அறிந்து கவர்னர் வெலிங்கடனைச் சந்தித்தார். அரசு தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கும் முன் நீங்கள் வந்து என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிராளியின் கருத்துகளை அறிந்து“இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம்

வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம் மு.சிவகுருநாதன்            இது ஒரு வரலாற்று நூல் அல்ல. கதவு என்கிற புள்ளியை மையமாகக் கொண்டு ஆதிமனிதனில் தொடங்கி வரலாறு மற்றும் தொன்மங்களின் ஊடாக பயணிக்கும் நூல். நூலாசிரியர் ஒரு பயண ஆர்வலர் என்றும் பரந்த வாசிப்பனுபவம் கொண்டவர் என்று பதிப்புரை சொல்வதற்கேற்ப வரலாற்றினூடாகப் பயணிப்பதற்கு வாசிப்பு பேருதவியாக இருப்பதை இந்நூல் உணர்த்தி நிற்கிறது. இருப்பினும் வழமையான வரலாற்று அணுகுமுறையின் போதாமையும் வெளிப்படுகிறது. கதவுகளைப் பொருண்மையாக எடுத்துக்கொண்டு அதன் முன்னும் பின்னுமாக வரலாறு,“வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.