அரசுப் பள்ளிகளில் தனிப்பட்ட செயல்களுக்கு இடமில்லை!

அரசுப் பள்ளிகளில் தனிப்பட்ட செயல்களுக்கு இடமில்லை! மு.சிவகுருநாதன்       கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய ஆசிரியரும் தலைமையாசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவரும் மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். இம்மாதிரியான நிகழ்வுகள் ஏன் பள்ளிகளில், வகுப்பறைகளில் நடைபெறுகின்றன? இத்தகைய செயல்களைச் செய்கின்ற ஆசிரியர்களது மனநிலை என்னவாக இருக்கிறது என்பது விரிவான ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒன்று.       பள்ளிகள் அனைவருக்கும்“அரசுப் பள்ளிகளில் தனிப்பட்ட செயல்களுக்கு இடமில்லை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா?

தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா? மு.சிவகுருநாதன்          தமிழகத்தில் நிலவிவந்த மாநில வாரியக் கல்விமுறை, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல், நர்சரிப்பள்ளிக் கல்வி என 5 வகையான கல்விமுறைகளுக்கு மாற்றாக சமச்சீர் கல்வி  தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட பேரா.ச.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு (2006) அளித்த பரிந்துரையில் சில மட்டுமே ஏற்புக்கு வந்தன.         தாய்மொழி வழிக்கல்வி, மழலையர் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல், பாடச்சுமை நீக்கம், மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம், தேர்வு முறை“தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள் வெறும் இரு துருவ மோதலா?

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள் வெறும் இரு துருவ மோதலா? மு.சிவகுருநாதன்           பள்ளி மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள், ஒழுங்கீனங்களை ஆசிரியர்-மாணவர் இரு துருவ மோதலாகச் சித்தரிக்கும் போக்குக் காணப்படுகிறது. இது மிகவும் தவறான முன்முடிவாகும். அரசு, பள்ளிக் கல்வித்துறை, சமூகம், பெற்றோர், சூழல் என அனைவரும் பொறுப்பெற்க வேண்டிய ஒன்று. இதை வழக்கம்போல தமிழ் சினிமா பாணியில் இரு துருவப் பிரச்சினையாகக் கட்டமைப்பதும் அணுகுவதும் பிரச்சினைகளின் வேர்களைத்தேடி அவற்றைக் களைய முற்படுவதை விடுத்து திசை திருப்பும் உத்தியாகவே“மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள் வெறும் இரு துருவ மோதலா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மிகை மதிப்பீடு!

மிகை மதிப்பீடு! மு.சிவகுருநாதன்          இன்றைய (16/07/2022) தலையங்கத்தில் குறிப்பிடப்படும் பள்ளிக்கல்விப் பேரெழுச்சி என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. நாளை வெளியாகவிருக்கும் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்கான டிரெய்லர் போல இது உள்ளது. (தேர்வு முடிவுதள்ளி வைக்கப்பட்டுவிட்டது.) இவ்வளவு பாராட்டிற்குப் பள்ளிக்கல்வித் துறை தகுதியானதுதானா என்ற கேள்வி நம்முன் எழுகிறது.             தொடக்க/நடுநிலைப் பள்ளிகள் பெரும்பாலும் 2 அல்லது 4 ஆசிரியர்களைக் கொண்டு இயங்குகின்றன. ‘இல்லம் தேடிக் கல்வி’த்திட்டத்திற்காக பல ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் ‘எண்ணும் எழுத்தும்’“மிகை மதிப்பீடு!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடநூல்களும் தமிழக ஆளுநரும்

பாடநூல்களும் தமிழக ஆளுநரும் மு.சிவகுருநாதன்         இந்தியாவை சனாதன தர்மமே ஆட்சி செய்கிறது என்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒருவகையில் இது உண்மைதானே! கடந்த எட்டாண்டுகளாக பல நேர்வுகளில் அரசியல் சட்டமும் நீதிமன்றமும் செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது.       சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக சிலரும் சில அமைப்புகளும் மாற்றப்பட்டுருக்கின்றவே! இதைத்தான் மநுதர்மத்தின் ஆட்சி என்று புரிந்துகொள்ள வேண்டும் போலும்!          தமிழகத்தில் எழுந்த இத்தகைய எதிர்ப்புணர்வை வேறு மாநிலத்தில் கண்டிருக்க முடியாது. இனி இவ்வாறு உளறும் முன் இந்த“பாடநூல்களும் தமிழக ஆளுநரும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓர் இரங்கல் குறிப்பு

ஓர் இரங்கல் குறிப்பு மு.சிவகுருநாதன்          நேற்று (15/06/2022) எனது ஆசிரியர் பயிற்சி நண்பரும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருமான திரு ச.ராஜூ சாலையில் நடந்து செல்லும்போது சிறுவன் ஓட்டிவந்த அதிகத்திறன் கொண்ட இரு சக்கர வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே மரணமடைந்துள்ளார். செய்தியறிந்தவுடன் நண்பர் தியாகசுந்தரம் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார்.          மிகவும் அன்பாகவும் அமைதியாகவும் பேசக்கூடிய மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். சட்டத்தை மீறி சிறுவர்களை வாகனம் இயக்க அனுமதிப்பது, அதிகத்திறன் கொண்ட பைக்குகளை வாங்கிக்“ஓர் இரங்கல் குறிப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகக் கல்வி அவலங்கள்

தமிழகக் கல்வி அவலங்கள் மு.சிவகுருநாதன் தனியார் பள்ளிகளுக்காகச் செயல்படும் கல்வித்துறை        9 ஆம் வகுப்பில் தேர்வு எழுத மாணவர்களுக்குத் தேர்ச்சியும் எழுதாதவர்களுக்கு மறுதேர்விற்கும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.       காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் சரியானது என்பதால் வரவேற்போம்.          இந்த முடிவை தேர்வுகள் முடிந்தவுடன் அறிவித்திருந்தால் மாணவர்களின் பதற்றம், மன உளைச்சல் பெருமளவு குறைந்திருக்கும். இனியாவது கல்வித்துறை உரிய முடிவுகளை உரிய காலத்துடன் எடுக்க முன்வரவேண்டும்.         இது மட்டும் போதாது.“தமிழகக் கல்வி அவலங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகக் கல்விக் கொள்கை: சில குறிப்புகள்

தமிழகக் கல்விக் கொள்கை:  சில குறிப்புகள் மு.சிவகுருநாதன்             பொதுப்பட்டியலிருக்கும் கல்விக்கு ஒன்றிய அரசு கல்விக்கொள்கையை உருவாக்கி நம்மீது திணிக்கிறது. மாநில அரசுகளின் கருத்துகளைக் கணக்கில் கொள்ளாமல் ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாக ஆதிக்கப்போக்குடன் நடந்துகொள்வதை நாம் ஏன் ஏற்கவேண்டும்? நமக்கென்று ஒரு கல்விக்கொள்கையை ஏன் உருவாக்கக்கூடாது? என்கிற மிக நீண்டகாலமாக நம்மைத் துரத்திக் கொண்டிருக்கும் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. தமிழக அரசு கல்விக்கொள்கையை உருவாக்கும் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு ஓராண்டில் கல்விக்கொள்கையை தயாரிக்கும் என்று“தமிழகக் கல்விக் கொள்கை: சில குறிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.