திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு                                                                                      -மு.சிவகுருநாதன் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை கணிசமாக உயர்த்திய மத்திய அரசு உப்பு சப்பில்லாத காரணங்களைச் சொன்னதோடு தனது பொறுப்புகளையும் தட்டிகழித்தது. பெட்ரோலியத்துறை அமைச்சர் உள்நாட்டில் இல்லாத, நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த சமயத்தில் திட்டமிட்ட இவ்விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. விலை நிர்ணயம் எங்கள் கைகளில் இல்லை, எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை நிர்ணயிக்கின்றன, அதில் நாங்கள் தலையிடமுடியாது என்றெல்லாம் சொல்லி தப்பிக்கப் பார்த்த மத்திய அரசு“திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிற்றிதழ் அறிமுகம்: புறனடை உலகமயச்சூழலில் தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் இடம்

சிற்றிதழ் அறிமுகம்: புறனடை உலகமயச்சூழலில் தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் இடம்                                                                                – மு.சிவகுருநாதன் தீவிர எழுத்து, படைப்பு, வாசிப்பு போன்ற செயல்பாட்டை இன்றும் உயிர்ப்புடன் தொடர தமிழ்ச் சிறுபத்திரிக்கைகள் சார்ந்த நடவடிக்கைகள் பெரிதும் உதவியிருக்கின்றது. ஆயுட்காலம் மிகக் குறைவாக இருந்தாலும் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் இதழ்கள் தோன்றிக் கொண்டேயுள்ளன. அந்த வகையில் வந்திருப்பது ‘புறனடை’ இதழ் (ஜனவரி 2012). “சிறுபத்திரிக்கைகள் ஒரு வரலாற்றுப் பருவத்தைக் கடந்து இடைநிலை இதழ்களாக மாறிவிட்டன. அவை மரபணு மாற்றப்“சிற்றிதழ் அறிமுகம்: புறனடை உலகமயச்சூழலில் தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் இடம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இறுகிப்போன, தட்டையான, மிகக்குறுகலான பார்வை

இறுகிப்போன, தட்டையான, மிகக்குறுகலான பார்வை                                                                              -மு.சிவகுருநாதன் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (The National Counter Terrorism Center – NCTC) அமைக்கப்படுவதால் மத்திய – மாநில அரசுகளிடையே ஏற்பட்டுள்ள உறவுச்சிக்கல் குறித்து இன்றைய (25.05.2012) தினமணி நடுப்பக்கத்தில் உதயை மு.வீரையன் ‘உரிமையும் உறவும்’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம், மத்திய-மாநில உறவுச்சிக்கல்கள் ஒருபுறமிருக்க பயங்கரவாதம் தொடர்பான அரசுகளின் கருத்துருவாக்கத்தை எவ்வித கேள்வியும் இன்றி மிகவும் தட்டையான பார்வையுடன் பல கட்டுரைகள்“இறுகிப்போன, தட்டையான, மிகக்குறுகலான பார்வை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெட்ரோல் விலை உயர்வு அநியாயமானது

பெட்ரோல் விலை உயர்வு அநியாயமானது                -மு.சிவகுருநாதன் பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ரூ 7.50 உயர்த்தியுள்ள மன்மோகன் சிங் அரசின் நடவடிக்கை மிகவும் அபாயகரமானது. இதற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு காரணமாகச் சொல்லப்பட்டாலும் உண்மையான பின்னணி அதுவல்ல. இந்திய நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவிற்கு மன்மோகன் சிங் கும்பல்தான் காரணம். அமெரிக்காவின் மிரட்டலுக்கு அல்லது அவர்களுக்கு சேவகம் செய்ய ஈரானிலிருந்து எண்ணைய், எரிவாயு இறக்குமதிக்கு முட்டுக்கட்டை போடும் இக்கும்பல் நமது“பெட்ரோல் விலை உயர்வு அநியாயமானது”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வி

இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வி                                                              -மு.சிவகுருநாதன் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது மூன்றாண்டு காலத்தையும் மாநிலத்தில் ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு ஓராண்டு காலத்தையும் நிறைவு செய்தது மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இத்துடன் இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் 60 ஆண்டுகள் நிறைவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கென அரசுகள் பல கோடி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கின்றன. இவையெல்லாம் ஆளும்கட்சிக்கு விலையில்லா விளம்பரங்களாக உதவுகின்றன. இந்த பல கோடி விளம்பரங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு“இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்

பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்                                                                               – மு.சிவகுருநாதன் (வட்டார வழக்கில் எழுதப்படுகிற படைப்புகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பாடமாக வைக்க மறுத்து வருகின்றன. அப்படி பாடமாக வைக்கப்பட்டாலும் பின்னாட்களில் எதிர்ப்பு வருகின்றது என்கிற பெயரில் அவைகள் நீக்கப்படுகின்றன. தொன்னூறுகளின் இறுதியில் சோலை சுந்தரபெருமாளின் ‘ஒரே ஒரு ஊர்ல…’ என்ற நாவல் ஒர் கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையொட்டி இக்கடிதம் தினமணிக்கு எழுதப்பட்டது. ஆனால் தினமணி வெளியிடவில்லை. பிறகு ‘கேப்பியார்’ இதழில் வெளிவந்தது.“பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில்

பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில்                                                                   -மு.சிவகுருநாதன் இடமிருந்து அப்துல் காதர், அ.மார்க்ஸ், மு.சிவகுருநாதன், பா.ரவிக்குமார், த.பிரிட்டோ 1995 இல் அ.மா.வின் நேர்காணலை சுபமங்களாவிற்காக கும்பகோணத்தில் த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், லிங்கம், திருத்துறைப்பூண்டி ரவிக்குமார், மு.சிவகுருநாதன் ஆகிய நாங்கள் பதிவு செய்தோம். இதை த.பிரிட்டோ தொகுத்து எழுதினார். பின்னர் அ.மா.விடம் காட்டி திருத்தம் செய்து நேர்காணல் இறுதி வடிவம் பெற்றது. இந்த நேர்காணல் சுபமங்களா ஜூலை-1995 இதழில் வெளியானது. த.பிரிட்டோ, மணலி அப்துல்“பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய அணுசக்தித் திட்டங்களை அம்பலப்படுத்தும் நான்கு குறுநூற்கள்

இந்திய அணுசக்தித் திட்டங்களை அம்பலப்படுத்தும் நான்கு குறுநூற்கள்                                                                                   – மு.சிவகுருநாதன் (கூடங்குளம் அணுஉலை, இந்திய அணுசக்தி திட்டங்கள், ஒப்பந்தங்கள் குறித்த 4 குறுநூற்களின் அறிமுகம்) 01. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் – அ. முத்துகிருஷ்ணன் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் பல மாதங்களாகத் தொடரும் நிலையில் அப்போராட்டங்கள் மற்றும் அணு உலைகளின் பாதிப்புக்களை விளக்கும் இக்குறுநூல் உயிர்மை 100 வது (டிசம்பர் 2011) வெளியான கட்டுரைகளின் தொகுப்பாகும். மிக எளிமையாக அணு உலைகளின்“இந்திய அணுசக்தித் திட்டங்களை அம்பலப்படுத்தும் நான்கு குறுநூற்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிற்றிதழ் அறிமுகம் மன்னார்குடியிலிருந்து ஓர் இதழ்

சிற்றிதழ் அறிமுகம் மன்னார்குடியிலிருந்து ஓர் இதழ்      -மு.சிவகுருநாதன் (தமிழின விடியல், தமிழ் மொழி மற்றும் தமிழின மேம்பாட்டிற்கான கருக்கல் – கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு இரு மாத இதழ்) திருவாருர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து அம்ரா பாண்டியனால் கருக்கல் – கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு இரு மாத இதழ் வெளிவந்துள்ளது. முதல் இதழ் மார்ச்-ஏப்ரல்-2012 சமீபத்தில்தான் என் பார்வைக்கு வந்தது. 48 பக்கங்கள் நிறைந்த இந்த இதழ், எந்த இசத் திற்குள்ளும் அடைபடாமல் தமிழின விடியல்,“சிற்றிதழ் அறிமுகம் மன்னார்குடியிலிருந்து ஓர் இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெற்றோர்களின் ஆர்வக்கோளாறை பணமாக்கும் தமிழக அரசு

பெற்றோர்களின் ஆர்வக்கோளாறை பணமாக்கும் தமிழக அரசு                                                                                        -மு.சிவகுருநாதன் தேர்வாணையத்தேர்வுகள், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகள், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் போன்ற தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிகின்றன. விண்ணப்பங்கள் பெறுவதில் தள்ளு முள்ளு, அடிதடி நடப்பதை ஊடகங்கள் வழி அறியமுடிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப விநியோக முறைகேடுகளால் தர்மபுரியில் காவல்துறை அட்டூழியம் அரங்கேறியது. இவற்றில் அரசு எந்திரத்தின் ஆணவ மற்றும் அலட்சியப்போக்கு இதன் மூலம் வெட்டவெளிச்சமாகிறது. நாட்டில் படித்தவர்கள் எத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்“பெற்றோர்களின் ஆர்வக்கோளாறை பணமாக்கும் தமிழக அரசு”-ஐ படிப்பதைத் தொடரவும்.