யாருக்காக இந்தத் தணிக்கை வேலைகள்?

யாருக்காக இந்தத் தணிக்கை வேலைகள்?    (2019 -2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான ஒரு விமர்சன முன்னோட்டம் – 02)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 மு.சிவகுருநாதன்    (10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் பற்றிய சில கருத்துகள்.)  பத்தாம் வகுப்பு புதிய தமிழ்ப் பாடநூலில் பெருஞ்சித்தரனார் பாடல் ஒன்று (தமிழ்த்தாய் வாழ்த்து) இடம்பெறுகிறது. ‘கனிச்சாறு’ (பக்.02) என்ற தொகுதியில் இடம்பெற்ற பாடல் என்பதால் இறுதியில் ‘கனிச்சாறு’ என்றே எழுதுகின்றனர். இதுவும் எட்டுத் தொகுதிகள் கொண்டது? இது“யாருக்காக இந்தத் தணிக்கை வேலைகள்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்வித் துறையா, தணிக்கைத் துறையா?

கல்வித் துறையா, தணிக்கைத் துறையா?   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான ஒரு விமர்சன முன்னோட்டம் – 01)   மு.சிவகுருநாதன்  (12 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் பற்றிய சில கருத்துகள்.) வரும் கல்வியாண்டிற்கான பாடநூல்களின் ‘திருட்டுப் பிரதிகள்’ எங்கும் கிடைக்கின்றன. அதற்குரிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இவைகள் கிடைக்காது. திருட்டுகள் அம்பலமானபிறகு இப்போது இணையதளத்தில் பதிவேற்றத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. 12 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடநூலைப் பற்றிய சில கருத்துகளை மட்டும் முன்னோட்டமாகப்“கல்வித் துறையா, தணிக்கைத் துறையா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா?

மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா?  (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி:08) மு.சிவகுருநாதன் (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப்  பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.) “பவுத்தத்தின் திறன்சார்ந்த வாழ்வில் வணக்கங்கள், சடங்குகள், தவம் அல்லது பக்தியின் மூலம் ஆதீத ஆற்றல்களைப் பெறுதல், வருவதுரைத்தல் ஆகியவற்றுக்கும் இடமில்லை.” (அ. மார்க்ஸ், புத்தம் சரணம் நூலில்.) ஆறாம்வகுப்பில் ‘பசிப்பிணி போக்கிய பாவை’ (பக்.24) என்ற நாடகமொன்று மணிமேகலைக் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு“மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்வு முறைகளை மாற்றியமைப்பதே நிரந்தரத் தீர்வு

தேர்வு முறைகளை மாற்றியமைப்பதே நிரந்தரத் தீர்வு  மு.சிவகுருநாதன் இன்று (25.03.2019) நடைபெற்ற பத்தாம் வகுப்புக் கணிதவியல் தேர்வுக் கடினமான இருந்தது என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. எனக்குக் கணிதப் பாடத்தில் அதிக ஈடுபாடு இல்லையென்பதால் நேரடியாக அதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. கணிதப் பாடநூல்கள் பற்றிக்கூட இதுவரையில் நான் கருத்துரைத்தது இல்லை. ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள் சிலரிடம் பேசியபோது கிடைத்த தகவல்களைக் கொண்டு சில முடிவுகளுக்கு வரமுடிகிறது. வழக்கமான எதிர்பார்த்த வினாக்கள் இல்லை. பாடநூல் வினாக்கள்“தேர்வு முறைகளை மாற்றியமைப்பதே நிரந்தரத் தீர்வு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய சிந்தனைகள் மற்றும் புதிய அணுகுமுறைகளின் தேவையை உணரவேண்டும்.

புதிய சிந்தனைகள் மற்றும் புதிய அணுகுமுறைகளின் தேவையை உணரவேண்டும்.   (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 07)    மு.சிவகுருநாதன் (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – புவியியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)         “ஆசியாவில் நாற்பத்து எட்டு நாடுகள் உள்ளன”, (பக்.159, 6, புவியியல்) என்று சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையால் அங்கரிக்கப்பட்ட (193) அல்லது அங்ககரிக்கப்படாத நாடுகளின் பட்டியலா?  எதிலிருந்து இவர்கள் என்ணிக்கையை முடிவு செய்கிறார்கள் என்பது விளங்கவில்லை. ஐ.நா.“புதிய சிந்தனைகள் மற்றும் புதிய அணுகுமுறைகளின் தேவையை உணரவேண்டும்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சாதிப்பெயர்களைப் பாடநூலில் பயன்படுத்துதல்: சில குறிப்புகள்

சாதிப்பெயர்களைப் பாடநூலில் பயன்படுத்துதல்: சில குறிப்புகள்  (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 06)  மு.சிவகுருநாதன்  (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் –  வரலாறு, தமிழ்ப்  பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)         ஒரு முன் குறிப்பு:       (2018-2019 ஆம் கல்வியாண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கும், 2019-2020 ஆம் கல்வியாண்டில் 2,7,10,12 ஆகிய வகுப்புகளுக்கும் எஞ்சிய 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டில் புதிய பாடநூல்கள் எனத் திட்டமிட்டு“சாதிப்பெயர்களைப் பாடநூலில் பயன்படுத்துதல்: சில குறிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

“எல்லாம் வேதத்திலும், வேதகாலத்திலும் இருக்கிறது!” என்று சொல்வதற்குப் பாடநூல்கள் தேவையா?

“எல்லாம் வேதத்திலும், வேதகாலத்திலும் இருக்கிறது!” என்று சொல்வதற்குப் பாடநூல்கள் தேவையா? (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 05) மு.சிவகுருநாதன் (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – புவியியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.) “இந்தியாவின் நிலவரைபடத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் வேதகாலத்தின்போது உருவானது. மகாபாரதத்தில் தண்ணீரால் சூழப்பட்ட உலகம் சித்தரிக்கப்பட்டுள்ளது”. (பக்.95) இன்னும் “மீண்டும் வேதங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்!”, (GO Back to Vedas) என்று சொல்ல வேண்டியதுதான் பாக்கி! விரைவில் அதையும் சொல்லிவிடுவார்கள்““எல்லாம் வேதத்திலும், வேதகாலத்திலும் இருக்கிறது!” என்று சொல்வதற்குப் பாடநூல்கள் தேவையா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விப்புல ஆய்வுகளின் அபத்தமும் அவலமும்

கல்விப்புல ஆய்வுகளின் அபத்தமும் அவலமும் (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 04) மு.சிவகுருநாதன் (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – புவியியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.) உயர்கல்வியில் ஆய்வின் தரம் எப்படியுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்படும் பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் அரசால் முடக்கப்படுவது அன்றாட நிகழ்வு. தங்களுக்கு ஏற்ற வகையிலான ஆய்வுகளை மட்டும் செய்ய இவைகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆய்வாளர்கள்“கல்விப்புல ஆய்வுகளின் அபத்தமும் அவலமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடும் நெருக்கடியில் பத்தாம் வகுப்புக் குழந்தைகள்

கடும் நெருக்கடியில் பத்தாம் வகுப்புக் குழந்தைகள்   (கல்வியில் ஜனநாயகத் தேவையை வலியுறுத்த வேண்டிய பொதுத்தேர்வுகள் நேரம்.)  மு.சிவகுருநாதன்            கல்வியில் குழந்தைகளுக்கு உரிய மதிப்பில்லை. கல்வி முறைகள் குழந்தைகளை இயந்திரங்களாக நினைக்கிறது, அதற்கேற்பவே கல்வித்துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள். குழந்தைகளின் குரலை யாரும் செவிமெடுப்பதில்லை. கல்வியாளர்கள் கூட இவற்றிற்கு முறையான எதிர்வினையாற்றுவதில்லை. இது அரசுப் பொதுத்தேர்வுகள் நேரம். அறநோக்கிலும் குழந்தைகள் நோக்கிலும் தேர்வுகள் என்பது குழந்தைகள் மீது செலுத்தப்படும் கொடிய வன்முறைகளுள் ஒன்று. எந்தத்“கடும் நெருக்கடியில் பத்தாம் வகுப்புக் குழந்தைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜெயமோகனுக்கு டாக்டர் பட்டம்!

ஜெயமோகனுக்கு டாக்டர் பட்டம்!    (பிழைகளுடன் உரிய கவனமின்றி தயாரிக்கப்பட்ட +1 பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாள் குறித்த பதிவு.)    மு.சிவகுருநாதன்       சென்ற ஆண்டு ‘நீட்’ தேர்வில் தமிழ் வழி வினாத்தாள் மொழிபெயர்ப்பு குளறுபடிகள், அது தொடர்பான வழக்குகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். புதிய பாடநூல்கள், புதிய தேர்வு முறைகள், மொழிப்பாடங்களுக்கு ஒரு தாள், அகமதிப்பீடு மதிப்பெண்கள் என பல புதிய கூறுகளுடன் +1 அரசுப் பொதுதேர்வு நேற்றுத் (மார்ச் 06, 2019) தொடங்கியுள்ளது. +1 தமிழ் வினாத்தாளைப்“ஜெயமோகனுக்கு டாக்டர் பட்டம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.