சுயநிதிப்பள்ளிகளாக மாறும் அரசு உதவிபெறும் பள்ளிகள்

சுயநிதிப்பள்ளிகளாக மாறும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மு.சிவகுருநாதன்     தமிழக முன்னாள் முதல்வரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.கருணாநிதி இரு நாட்கள் திருவாரூரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சின்னசேலம் (பங்காரம்) எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்காவின் குடும்பத்தினரை அழைத்து ஆறுதல் சொல்லி ஒரு லட்சம் இழப்பீட்டை கட்சியின் சார்பில் வழங்கியிருக்கிறார். தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். காட்டூர் அரசு“சுயநிதிப்பள்ளிகளாக மாறும் அரசு உதவிபெறும் பள்ளிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

33. மலம் சுமக்கும் மனிதர்களை வெளிப்படுத்தும் ஆவணம்

33. மலம் சுமக்கும் மனிதர்களை வெளிப்படுத்தும் ஆவணம் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (விடியல் பதிப்பகம் டிசம்பர் 2014 -ல் வெளியிட்ட பாஷா சிங் எழுதி விஜயசாய் மொழிபெயர்த்த ‘தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்’ என்ற மலமள்ளும் மானுட அவலம் குறித்த ஆவணம் பற்றிய பதிவு இது.) சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்படும் மலமள்ளும் தொழிலாளர்கள், அவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் குறித்த பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா“33. மலம் சுமக்கும் மனிதர்களை வெளிப்படுத்தும் ஆவணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய அரசியலின் உண்மை முகம்!

இந்திய அரசியலின் உண்மை முகம்! மு.சிவகுருநாதன்   கடந்த இரண்டு நாளாக இரு மாநில முதலமைச்சர்கள் பற்றிய செய்திகள் இதழ்களில் வெளியானது. ஒன்று தெலங்கனா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் (ஜனவரி 21, 2016) பற்றியது; மற்றொன்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாயுடையது (ஜனவரி 22, 2016). முதலாமவர் தனக்கு 100 செட் கதர் சட்டை, பேன்ட்களை ரூ. 3 லட்சம் மதிப்பிலும் பின்னவர் தனது மனைவிக்கு ரூ. 1.09 லட்சத்திற்கு ‘வாட்டர் புரூப்’ பட்டுப்புடவையும் வாங்கினார். இது வெறுமனே“இந்திய அரசியலின் உண்மை முகம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்கள் சபரிமலையில் நுழைந்தால் தீட்டாகிவிடுமா? அய்யப்பன் பிறப்பே அசிங்கமான கதையல்லவா!

பெண்கள் சபரிமலையில் நுழைந்தால் தீட்டாகிவிடுமா? அய்யப்பன் பிறப்பே அசிங்கமான கதையல்லவா! பொ.இரத்தினம் மு.சிவகுருநாதன் சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கவேண்டும் எனக்கோரி இளம் வழக்கறிஞர்கள் சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண்களை கோயிலுக்குல் நுழைய அனுமதி மறுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று சொல்லி கேரள அரசுக்கும் சபரிமலை தேவசம் போர்டுக்கும் அறிவிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வழக்கைத் தொடுத்த இளம் வழக்கறிஞர்கள் இது குறித்து“பெண்கள் சபரிமலையில் நுழைந்தால் தீட்டாகிவிடுமா? அய்யப்பன் பிறப்பே அசிங்கமான கதையல்லவா!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டை ஆதரிப்பதுபோல் நடிக்கும் அரசியல் முகமூடிகளும் மார்க்கண்டேய கட்ஜூ போன்ற சட்டம் அறிந்த முட்டாள்களும்

காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டை ஆதரிப்பதுபோல் நடிக்கும் அரசியல் முகமூடிகளும் மார்க்கண்டேய கட்ஜூ போன்ற சட்டம் அறிந்த முட்டாள்களும் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அமைப்பாளர் பகத்சிங் மக்கள் சங்கம் தொடர்புக்கு: 94434 58118   ஜல்லிக்கட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏதோ அவசரகதியில் வழங்கப்பட்டதல்ல. நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டதுதான் ஜல்லிக்கட்டுத் தடை. இரு காரணங்களை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. ஒன்று ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றன. மற்றொன்று காளைகளை அடக்குவோருக்கும் கடுமையான காயங்களும் உயிரிழப்புகளும்“காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டை ஆதரிப்பதுபோல் நடிக்கும் அரசியல் முகமூடிகளும் மார்க்கண்டேய கட்ஜூ போன்ற சட்டம் அறிந்த முட்டாள்களும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

32. இந்து மதப் புரட்டுகளை அம்பலப்படுத்தும் நூல்

32. இந்து மதப் புரட்டுகளை அம்பலப்படுத்தும் நூல் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (பேரா. தொ.பரமசிவன் எழுதிய அய்ந்து குறுநூல்களைத் தொகுத்து கலப்பை பதிப்பகம் வெளியிட்ட ‘இந்து தேசியம்’ என்ற நூல் குறித்த அறிமுகப் பதிவு இது.) சிறு வெளியீடுகள் மற்றும் குறுநூல்கள் அவ்வப்போது எழும் தேவையடிப்படையில் வெளிவருபவை. ஒரு வகையில் தனிச்சுற்று இதழ்களைப் போல பிறகு வாசிப்புக்குக் கிடைக்காமல் போகிறது. சிவக்குமரன் என்ற புனைப்பெயரில் தொ.பரமசிவன் எழுதிய கீழ்க்கண்ட ஐந்து குறுநூல்களை ‘யாதுமாகி“32. இந்து மதப் புரட்டுகளை அம்பலப்படுத்தும் நூல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

31. பெயிலாக்கும் ஆசிரியரின் அதிகாரம்

31. பெயிலாக்கும் ஆசிரியரின் அதிகாரம் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (‘வாசல்’ வெளியிட்ட ஜே. ஷாஜஹான் தமிழில் மொழிபெயர்த்த ‘எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?’ என்ற நூல் குறித்த அறிமுகப்பதிவு இது.) 1960 களில் இத்தாலியில் உள்ள பார்பியானா பள்ளி மாணவர்கள் எட்டு பேர் எழுதிய ‘Letter to A Teacher’ என்ற நூலின் அறிமுகமாக எழுதப்பட்ட குறுநூல் ‘எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?’ ஆகும். ஜே.ஷாஜஹான் இந்நூலில் உள்ள கடிதங்களின் சாரத்தை தமிழில்“31. பெயிலாக்கும் ஆசிரியரின் அதிகாரம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

30. வரலாறுகள் கதைகளாய்…

30. வரலாறுகள் கதைகளாய்… (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (எதிர் வெளியீடாக ஆகஸ்ட் 2014 –ல் வெளியான, த.வெ.பத்மா ஆங்கிலத்தில் எழுதி, ஜே. ஷாஜஹான் தமிழில் மொழிபெயர்த்த ‘கனவினைப் பின் தொடர்ந்து… வரலாற்றின் கதைகள்’ என்ற நூல் குறித்த அறிமுகப்பதிவு இது.) கதைகள் வரலாறுகள் ஆவதற்கும் வரலாறுகள் கதைகளாகச் சொல்லப்படுபடுவதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஊர் சுற்றுவதை அறிவுத்தேடலுக்கு முன் நிபந்தனையாக்கி, தத்துவஞானியாகவும் மார்க்சிய அறிஞராகவும் அறியப்பட்ட ராகுல்ஜி என்கிற ராகுல் சாங்கிருத்தியாயன் வரலாறுகளை“30. வரலாறுகள் கதைகளாய்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

29. இந்துத்துவம் கட்டமைக்கும் வரலாற்றை எதிர்கொள்ளல்

29. இந்துத்துவம் கட்டமைக்கும் வரலாற்றை எதிர்கொள்ளல் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன்   (மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கோவிந்த் பன்சாரே எழுதிய ‘மாவீரன் சிவாஜி – காவித் தலைவனல்ல, காவியத் தலைவன்’ என்ற நூலின் தமிழாக்கத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்தவர் செ.நடேசன். இந்நூல் குறித்த அறிமுகப் பதிவு இது.) மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மராத்தி எழுத்தாளரும் சிந்தனையாளருமான கோவிந்த் பன்சாரே ‘சிவாஜி கோன் ஹோடா’ (யார் அந்த“29. இந்துத்துவம் கட்டமைக்கும் வரலாற்றை எதிர்கொள்ளல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

28. கொள்ளையர்கள் கையில் கல்வி

28. கொள்ளையர்கள் கையில் கல்வி (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன்   (‘களவு போகும் கல்வி’ என்ற மு. நியாஸ் அகமது  எழுதி ‘இயல்வாகை’ வெளியிட்ட WTO & GATS ஒப்பந்த எதிர்ப்புக் குறுநூல் குறித்த அறிமுகப் பதிவு.)   1990 களில் உலகமயத்தின் விளைவுகள் குறித்த கரிசனங்களை தமிழில் சிறுபத்தரிக்கை சார்ந்த அரசியல் இதழ்கள் முன்னெடுத்தன. நிகழ், நிறப்பிரிகை போன்ற இதழ்களின் பங்கு பணிகள் குறிப்பிடத்தக்கன. வழக்கம்போல வெகுஜன தமிழ் இதழ்கள் எப்போதும்“28. கொள்ளையர்கள் கையில் கல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.