தஞ்சையில் பொதி 76 நிகழ்வு

தஞ்சையில் பொதி 76 நிகழ்வு மு.சிவகுருநாதன் தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் பவளவிழா நிறைவு நிகழ்ச்சி தஞ்சை பெசண்ட் அரங்கில் சிம்ளி, முக்கூடல், சிலிக்குயில் ஆகிய அமைப்புகளும் நண்பர்களும் இணைந்த 28/04/2024 முழுநாள் நிகழ்வாக நடந்தேறியது. பேரா. அ.மார்க்ஸ், பேரா.இரா.காமராசு, பேரா. தெ.வெற்றிச்செல்வன், பேரா. இலக்குமி குமாரன் ஞானதிரவியம், பசு.கவுதமன், கடவூர் மணிமாறன், கவிஞர் நா.விச்வநாதன், களப்பிரன் போன்றோர் காலை அமர்வில் பொதியின் பணிகளையும் அவருடனான நட்பையும் எடுத்துரைத்தனர். மதிய அமர்வில் ஜமாலன், கண.குறிஞ்சி, பேரா. இரா.கந்தசாமி, பேரா.“தஞ்சையில் பொதி 76 நிகழ்வு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவாரூர் தாஜ்மஹால்!

திருவாரூர் தாஜ்மஹால்! திருவாரூர் அம்மையப்பன் ஜெய்லானி பீவி மஹால் (ஜெயிலானியா மர்கஸ்) மு.சிவகுருநாதன் திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற கிராமத்தில் தாயின் நினைவாக ரூபாய் 5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் நினைவிடம் உருவாக்கப்பட்டு, திறக்கப்பட்ட செய்தி நேற்று (09/06/2023) காட்சியூடகங்களில் செய்தியாக வெளியானது. இன்றைய (10/06/2023) அச்சு ஊடகங்களில் அச்செய்தி இடம்பெற்றுள்ளது. இன்று (10/06/2023) மாலை நிலாக்களுடன் அங்கு கிளம்பினோம். அம்மையப்பனிலிருந்து திருக்கண்ணமங்கை செல்லும் சாலையில் இந்த மர்கஸ் அமைந்துள்ளது. மாலை வேளையில் நல்ல“திருவாரூர் தாஜ்மஹால்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா? மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன். கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள். எனவே புதிய நூல்களின் வரவு குறைவு. புத்தகக் கண்காட்சியின் கடைகள் பட்டியல் (site map) கூட இல்லை. உள்ளே நுழைய முடியாத குறுகலான கழிப்பறை; கழிவுகள் ஆறாக ஓட மெரினா மாற்றுத்திறனாளி மரப்பாலம் போல பிளைவுட் பலகையில் நடந்து வெளியேற“ஒரு நாள் போதுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

17 ஆம் ஆண்டு நினைவில்…

17 ஆம் ஆண்டு நினைவில்… திருமிகு ச.முனியப்பன் தோற்றம்: 07/03/1931  மறைவு: 19/11/2005             இன்று (19/11/2022) அப்பாவின் நினைவு நாள். அவர் மறைந்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அம்மாவும் மறைந்து விரைவில் ஓராண்டு ஆகப்போகிறது. அப்பாவின் இந்த நினைவுநாளில் அம்மாவும் இல்லை.        எனது தந்தையார் திரு ச.முனியப்பன் (1931-2005) இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றியவர். வ.உ.சி. அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியைத் தொடங்கி (1952) அப்பகுதி மக்களுக்கு கல்வி கிடைக்கக்“17 ஆம் ஆண்டு நினைவில்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்… மு.சிவகுருநாதன்         104 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் தங்கியிருந்த இடம் மேலநாகை என்னும் கிராமம்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலநாகை என்னும் இச்சிற்றூர் உள்ளது.     அங்கு  தியான மண்டபம் ஒன்றைக்  கட்டியிருக்கிறார்கள்.     27.05.2018  அன்று  மாலை எனது மூத்த மகள் கவிநிலாவுடன் ஒருமுறை  மேலநாகை சென்று வந்தேன். அப்போது எடுக்கப்பட்ட மூன்று படங்களும் இங்கே உள்ளன.“பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்

மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள் மு.சிவகுருநாதன்              இன்று (15/04/2022) நெடுநாளைய நண்பர் தோழர் மணலி அப்துல்காதர் திருவாரூர் வந்திருந்தார். 1990களில் ‘கிழக்கு’ எனும் சிற்றிதழ் நடத்தியவர். அப்போதிலிருந்து பழக்கம். ‘நிறப்பிரிகை’ கும்பகோணத்தில் நடத்திய புதுமைப்பித்தன் கருத்தரங்கில்தான் முதன்முதலில் சந்தித்தோம். அன்றைய தினம் மறைந்த த.பிரிட்டோ, கொளப்பாடு ச.பாண்டியன் போன்றோருடன் நண்பராகும் வாய்ப்பும் அமைந்தது. பிறகு ராயநல்லூர் பூங்குன்றப் பாண்டியன், இரவிக்குமார், செல்லப்பா போன்றோருடன் நட்புடன் வாசிப்பும் தொடர்ந்தது. தொடர்ந்து இல்லாவிட்டாலும் அவ்வப்போது இலக்கிய, நுண்ணரசியல்“மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம்…

இன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம்… மு.சிவகுருநாதன்       இன்று (15/04/2022) (புனித) வெள்ளியன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம் (திகம்பர சமணப் பள்ளி) சென்று வந்தோம். ஏற்கனவே ஐந்துமுறை அங்கு சென்றுள்ளேன். இன்று முதன்முறையாக கவி நிலா மற்றும் கயல் நிலா உடன்…       திருவாரூர் கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிந்து 10 கி.மீ. தொலைவில் அரசவனங்காடு என்னும் ஊருக்கு உள்ளேயுள்ள அழகான சிற்றூர் தீபங்குடி ஆகும். கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார்இன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாஸ்கோடகாமா – கயல்நிலா – கடல்

வாஸ்கோடகாமா – கயல்நிலா – கடல் மு.சிவகுருநாதன்         முதல் வகுப்பு படிக்கும் எங்கள் இளைய மகள் கயல்நிலா இதுவரையில் கடலை நேரில் பார்த்ததில்லை. அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. கொரோனாப் பெருந்தொற்று பயணங்களை முற்றாக அபகரித்துக் கொண்டது.          முதல் மகள் கவிநிலாவுக்கு  வேளாங்கண்ணி, தரங்கம்பாடி என இருமுறை கடற்கரைக்கு சென்று வந்த அனுபவம் உண்டு. மேலும் கல்லணை, தஞ்சாவூர் பெரியகோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், சிதம்பரம் போன்ற“வாஸ்கோடகாமா – கயல்நிலா – கடல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு நினைவுக் குறிப்பு

ஒரு நினைவுக் குறிப்பு மு.சிவகுருநாதன்             வேதாரண்யம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் (1983-1986)  நான் 6-8 வகுப்புகளைப் படித்தேன். அப்பள்ளி இன்று மேனிலைப்பள்ளி.  அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலானப் பொதுத்தேர்வு உண்டு. அத்தேர்வை அருகிலுள்ள உயர்நிலை அல்லது மேனிலைப் பள்ளிகளில்தான் எழுத வேண்டும். நாங்கள் தகட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் (இப்போது அது மேனிலைப்பள்ளியாக உள்ளது.)  எட்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுதினோம்.          ஒன்பதாம் வகுப்பிற்கு“ஒரு நினைவுக் குறிப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அரசுப்பள்ளிகள் அன்றும் இன்றும்

அரசுப்பள்ளிகள் அன்றும் இன்றும்     (நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் அரசு மேனிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு ஆர். ஆனந்தராஜ் (KTC) அவர்களுக்கான பாராட்டுகளை முன்வைத்து…)     மு.சிவகுருநாதன்       அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் அரசுப்பள்ளிகள் இன்று வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கின்றன. உலகமயத்தின் தாக்கம் பிற துறைகளைப் போலவே கல்வியிலும் சீரழிவை உண்டு பண்ணியுள்ளது. இவற்றைச் சரிசெய்வது ஒரு சிலரால் முடிகிற காரியல்ல. இருப்பினும் “அரசுப்பள்ளிகளைக்“அரசுப்பள்ளிகள் அன்றும் இன்றும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.