காந்தியின் ரத்த வாரிசுகள்

காந்தியின் ரத்த வாரிசுகள்  (மகாத்மாவின் கதை தொடரின் பதினேழாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                  மகாத்மா காந்தி தேசத்தந்தை என்று புகழப்பட்டிருந்தாலும் அவரது பெயர் பிற்காலத்தில் குழப்பத்திற்கு உள்ளாகிவிட்டது. ஜவகர்லால் நேருவின் மகளான இந்திரா பிரியதர்சினி பார்சி (ஜொராஸ்டரியம்) சமயத்தைச் சார்ந்த பெஃரோஸ் காந்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆண்வழிச் சமூக வழக்கப்படி இந்திரா பிரியதர்சினி இந்திரா காந்தி ஆனார். அவரது இரு மகன்களுக்கு ராஜூவ் காந்தி, சஞ்சய் காந்தி எனப் பெயரிட்டார். நேருவின் மறைவுக்குப் பின்“காந்தியின் ரத்த வாரிசுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தஞ்சையில் பொதி 76 நிகழ்வு

தஞ்சையில் பொதி 76 நிகழ்வு மு.சிவகுருநாதன் தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் பவளவிழா நிறைவு நிகழ்ச்சி தஞ்சை பெசண்ட் அரங்கில் சிம்ளி, முக்கூடல், சிலிக்குயில் ஆகிய அமைப்புகளும் நண்பர்களும் இணைந்த 28/04/2024 முழுநாள் நிகழ்வாக நடந்தேறியது. பேரா. அ.மார்க்ஸ், பேரா.இரா.காமராசு, பேரா. தெ.வெற்றிச்செல்வன், பேரா. இலக்குமி குமாரன் ஞானதிரவியம், பசு.கவுதமன், கடவூர் மணிமாறன், கவிஞர் நா.விச்வநாதன், களப்பிரன் போன்றோர் காலை அமர்வில் பொதியின் பணிகளையும் அவருடனான நட்பையும் எடுத்துரைத்தனர். மதிய அமர்வில் ஜமாலன், கண.குறிஞ்சி, பேரா. இரா.கந்தசாமி, பேரா.“தஞ்சையில் பொதி 76 நிகழ்வு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை

எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை மு.சிவகுருநாதன்             சமகாலத் தமிழ் அறிவுச்சூழலை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் எஸ்.வி.ராஜதுரை. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற கோட்பாடுகளுடனும் அவற்றைத் தாண்டியும் அரசியல், கலை, இலக்கியம், சமூகம், பொருளாதாரம், மனித உரிமை சார்ந்த படைப்புவெளியில் மட்டுமல்லாது, களப் போராளியாகவும் இயங்கிவருகிறார்.         நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன் என்கிற வரிசையில் தமிழ் அறிவுச்சூழலுக்குப் பாரிய பங்களிப்பை நல்கியவர் எஸ்.வி.ராஜதுரை. தமிழ் அறிவுலகுக்கு மக்கள் சார்ந்த“எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மணல் வீடு 50

மணல் வீடு 50 மு.சிவகுருநாதன்            மணல் வீடு 50 வது இதழ் (ஜனவரி – மார்ச் 2024) நமது கைகளில். 160 பக்கங்களில் படைப்புகளின் பெட்டகமாக வெளிவந்துள்ளது. அட்டைகளில் Michel V. Meulenert இன் வண்ண ஓவியங்கள் அணி செய்கின்றன. இந்த இதழின் சிறப்பாக ஒன்றிரண்டை மட்டும் இங்கு எடுத்துக்காட்டலாம்.         ‘தொ.ப.வின் பிரதியாக்கம்: ஓர் பண்பாட்டுப் பொருள்வாத அணுகுமூறை’ என்ற தோழர் ஜமாலனின் கட்டுரை ஆய்வறிஞர் தொ.பரமசிவனை திராவிடப் பண்பாட்டு ஆய்வாளர் என்ற பொதுப்புத்தி“மணல் வீடு 50”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்?

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்? மு.சிவகுருநாதன்          தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாயிற்று. ஜூன் 4இல் இந்தியாவின் எதிர்காலம் தெரிந்துவிடும். அதில்தான் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. சுதந்திர இந்தியாவுடன் உருவான பாகிஸ்தானை விட சிறந்த ஜனநாயக நாடாகத் திகழ்வதற்கு நம்முடைய அரசியல் சாசனம், ஜனநாயகத்தின் தூண்கள், மதச்சார்பின்மை கொள்கைகள், அரசியல், சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள், தன்னலமற்ற தலைவர்கள், மக்களின் சகிப்புத்தன்மைமிக்க வாழ்வு  போன்றவை அடித்தளமாக அமைந்தவை. அவற்றில் சிற்சில குறைபாடுகள் இருக்கலாம். எனினும் தகர்த்தெறிய வேண்டிய அளவிற்கானவை அல்ல. “இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொலைச் சதியின் பாதை

கொலைச் சதியின் பாதை  (மகாத்மாவின் கதை தொடரின் பதினாறாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்            காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தியை அகில இந்திய வானொலி அறிவித்தது. இதன் பொருட்டு மதக்கலவரங்கள் தொடங்கி விடும் என்கிற அச்சம் உண்டானது. மக்களை அமைதிப்படுத்தும் பணியில் தலைவர்கள் இறங்கினர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே தான் கொலைகாரன் என பிரிட்டிஷ் வானொலி முதலில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய வானொலியும் இச்செய்தியை ஒலிபரப்பி மதமோதல்கள் நடக்காமல் தடுத்தன. இந்தியர்களின் வாழ்வின் ஒளி“கொலைச் சதியின் பாதை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மகாத்மாவின் இறுதி நாள்கள்

மகாத்மாவின் இறுதி நாள்கள் (மகாத்மாவின் கதை தொடரின் பதினைந்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்              சுதந்தர இந்தியாவில் காந்தி 168 நாள்கள் மட்டுமே வாழ்ந்தார். அதுவும் துயரம் நிரம்பிய வாழ்வாக அது அமைந்தது. சுதந்திரப் போரைவிட அதிக சக்தியுடனும் நம்பிக்கையுடனும் இந்து – முஸ்லீம் – சீக்கிய ஒற்றுமைக்காக களம் கண்டார். அவரது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. 1947 ஜூலை 15இல் தொடங்கி 1948 ஜனவரி 30 முடிய காந்தியின் இறுதி 200 நாட்களை இந்து நாளிதழில்“மகாத்மாவின் இறுதி நாள்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும் அறவியல் பார்வை

சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும்  அறவியல் பார்வை மு.சிவகுருநாதன் (நக்கீரனின் ‘இயற்கை 24*7 – சுற்றுச்சூழல் வழிகாட்டி நூல்’ குறித்த அறிமுகப்பதிவு.)          சூழலியல் கற்பிதங்களையும் அதன் பின்னாலிருக்கும் அரசியலையும் சூழலியல் அறத்தையும் 18 தலைப்புகளில் நுட்பமாகவும் சுருக்கமாகவும் அதே சமயம் மிகத் தெளிவாகவும் இந்நூலில் எழுதியிருக்கிறார் நக்கீரன்.  அறிவியல் என்ற பிரிவில்  ஆறாம் அழிவு, புடவி (பிரபஞ்சம்), உயிர்க்கோளம், பெருங்கடல், கடற்கரை, மணல், தண்ணீர், காற்று, ஒளியும் ஒலியும், காடு  ஆகிய 10 தலைப்புகளும்  அரசியல் பிரிவில்“சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும் அறவியல் பார்வை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும்

இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும் (மகாத்மாவின் கதை தொடரின் பதினான்காவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்               இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் ஆலன் ஆக்டோவியன் ஹியூம் (Allan Octavian Hume) முயற்சியால் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். 1885 டிசம்பர் 28 பம்பாயில் நடந்த முதல் அமர்வில் உமேஷ் சந்திர பானர்ஜி முதல் தலைவராகத் தேர்வானார்.  அன்று காங்கிரஸ் தலைவர்கள் ராஷ்டிரபதி (President) என்றழைக்கப்பட்டார். ஆண்டுகொருமுறை புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. இந்த“இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் 

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் (மகாத்மாவின் கதை தொடரின் பதிமூன்றாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                காந்தி அரசியல் பணிகளுடன் சமூகப்பணிகளையும் இணைத்தே செயல்படுத்தினார். அரசியல் விடுதலையுடன் சமூக, பொருளாதார விடுதலையும் பெற வேண்டும் என்பதில் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். நிர்மாணத் திட்டங்கள் என்று பெயரில் பல்வேறு காலகட்டங்களில் இவற்றை முன்னெடுத்துச் சென்றார். கதர் பரப்புரை, மதுவிலக்கு, வார்தா (ஆதார) கல்வித் திட்டம், தீண்டாமை ஒழிப்பு, முதியோர் கல்வி, நலக்கல்வி, கிராம சுகாதாரம், கிராமத் தொழில்கள், பொருளாதார சமத்துவம், பெண்கள்,“காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் “-ஐ படிப்பதைத் தொடரவும்.