கற்றல்விளைவுகள்:தொடரும் திணிப்புகள்

கற்றல் விளைவுகள்: தொடரும் திணிப்புகள் மு.சிவகுருநாதன்            இன்று பள்ளிக்கல்வியில் வேறு எதைக்காட்டிலும் இன்று கற்றல் விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பயிற்சியில் எல்லாம் கற்றல் விளைவுகள் பற்றியே கதைக்கிறார்கள். இதற்கு நீண்ட விளக்கமெல்லாம் அளிக்கப்படுகிறது. மேலிருந்து கீழ்வரை கல்வித்துறையை மேற்பார்வையிடும் அலுவலர்கள் கற்றல் விளைவு பற்றியே வினா எழுப்புகின்றனர்.  வேறு எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கற்றல் விளைவுகள் இருந்தால் போதும் என்றாகிவிட்டது.        கற்றல் நோக்கங்கள், விளைவுகள் எல்லாம் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாடநூலை ஒட்டியே அமைபவை.“கற்றல்விளைவுகள்:தொடரும் திணிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமூக இடைவெளி!

சமூக இடைவெளி! மு.சிவகுருநாதன்            கொரோனா காலத்தில் பிரபலமானது சமூக இடைவெளி எனும் சொல்லாடல். நாம் இங்கு அந்தச் சமூக இடைவெளியைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஏழை – பணக்காரன், கிராமம் – நகரம், அறம் சார் வாழ்க்கை – போக்கிரி வாழ்வு, சாதி, மதம், மொழி, இனம் சார்ந்த இடைவெளிகள் தொடர்கின்றன. “இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்பது மேம்போக்கான பார்வையாக நிலைத்துவிட்டது. சாதிகள் முன்பைவிட தீவிரமாக துலக்கம் பெற்றுள்ளன. பண்பாட்டு அடையாளங்களைத் தேடுதல் என்கிற பெயரில்“சமூக இடைவெளி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி மு.சிவகுருநாதன்            தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  (NCERT) ஒன்றிய அளவில்  பள்ளிகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றை வடிவமைத்து,  1-12 வகுப்புகளுக்கான பாடநூல்களையும் தயாரித்து வெளியிடுகிறது. ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்தப் பாடநூல்களையே மத்தியக் கல்வி வாரியம் (CBSE), கேந்திரிய வித்யாலயா (KV), நவோதயா (NV) போன்ற பள்ளிகள் பயன்படுத்துகின்றன.           மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மாநில வாரியத்திற்கான பாடத்திட்டம்“பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

பாடநூல்களில் வெறுப்பு அரசியல் மு.சிவகுருநாதன்          குழந்தைகளுக்கான பாடநூல்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்பு உணர்வுடனும் எழுதப்பட வேண்டியது அவசியம். தவறான செய்திகளும் கருத்துகளும் ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு, இந்துத்துவத்துக்கு வலுச் சேர்க்கும் கருத்தோட்டங்கள் பள்ளிப் பாடநூல்களில் தூவப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். பாடப் புத்தகங்களில் வெறுப்பு அரசிலைப் புகுத்தி குழந்தைகளின் மனத்தில் நஞ்சை விதைக்க அனுமதிக்கக் கூடாது. அப்படியான நச்சுக் கருத்துகளை இனங்கண்டு அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.           தமிழ்நாட்டுப் பாடநூல்களில் காணப்படும் இத்தகைய விஷயங்களிலிருந்து சிலவற்றை இங்கு“பாடநூல்களில் வெறுப்பு அரசியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்?

தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்? மு.சிவகுருநாதன்            பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த தமிழ்நாட்டின் கல்விக்கொள்கைக் குழுவில் முழுவீச்சில் செயல்பட்ட கல்வியாளர் லெ.ஜவகர்நேசன் இக்குழுவிலிருந்து வெளியேறியிருக்கிறார். அரசின் குழுக்களின் நிலை இதுதான் என்றாலும் கல்வி சார்ந்து இயங்குவோருக்கு இது பெரிய அதிர்ச்சியாக உள்ளது. கல்வி பற்றிய அக்கறையின்மையால் இப்பிரச்சினை ஒரு சிறிய வட்டத்தைத் தவிர வேறெங்கும் பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்த மறுப்பறிக்கைகளுடன் இப்பிரச்சினை கைவிடப்பட்டுள்ளது.               பொதுவாக கல்விக்குழு என்பது முன்னாள், இந்நாள் கல்வி அலுவலர்கள், துணைவேந்தர்கள்,“தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலைந்து போகுமா கல்விக் கனவு?

கலைந்து போகுமா கல்விக் கனவு? மு.சிவகுருநாதன்              பாஜக தலைமையிலான மத்திய அரசு உருவாக்கிய தேசியக் கல்விக் கொள்கையை (2020), தார்மிகரீதியாக எதிர்த்துவந்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதனால்தான், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மாநில அளவிலேயே ஒரு கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது எனும் செய்தி பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவில் ஏற்பட்டிருக்கும் சலனம், இது தொடர்பான நம்பிக்கைகளைச் சிதறடித்துவிடுமோ எனும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக அரசின்“கலைந்து போகுமா கல்விக் கனவு?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

+2 தேர்வு முடிவுகள்: ஒரு பார்வை மு.சிவகுருநாதன்             இன்று (08/05/2023) தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.  தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியோர்களின் எண்ணிக்கை மட்டுமே தேர்ச்சி விழுக்காட்டில் வரும். தேர்விற்கு வருகை தராத சுமார் 50,000 மாணவர்களை சேர்த்தால் விழுக்காடு குறையலாம்.          சென்ற ஆண்டைவிட அதிகம் என்பது பெருமையை விட அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அளவில் இருப்பதுதான் உண்மையான பெருமையாகும். அதற்கு தேர்வு முறைகள், வினாத்தாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை?

தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை? மு.சிவகுருநாதன்           கல்வித் துறையில் திமுக அரசு முன்னெடுத்த குறிப்பிடத்தக்க பணிகள் என இரண்டைக் குறிப்பிடலாம். முதலாவது, கல்விக் கொள்கை உருவாக்கக் குழு ஒன்றை அமைத்தது; மற்றொன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர் உள்ளிட்டோருக்கான நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின்கீழ் கொண்டுவருவதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது.         கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவின் பணி ஓராண்டு என வரையறுக்கப்பட்டது. இது ஓராண்டில் முடியக்கூடிய பணியல்ல. இதன்துணைக் குழுக்கள் ஓராண்டு கழித்து அமைக்கப்பட்டது“தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கரும்  கல்வியும்

அம்பேத்கரும்  கல்வியும் மு.சிவகுருநாதன்             கல்வி என்றால் என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்வது நல்லது. அதாவது, கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வேண்டும். பற்றற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக அவரை ஆக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார். இக்கருத்துகள்  இங்கு  சிந்திக்கத் தக்கன.          கல்வியின் நோக்கம் ஏதேனும் ஒன்றை திணிப்பதல்ல. மாறாக ஏற்கனவே இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டிருப்பதை வெளிக்கொணர்ந்து விடுவித்து அவர்களை நிர்வாணமாக்குவதே கல்வி. எத்தகைய பற்றுகளும் முன்முடிவுகளும் துறந்து நிர்வாணமாவதே“அம்பேத்கரும்  கல்வியும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை

+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை? மு.சிவகுருநாதன்       தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்  +2 பொதுத்தேர்வு மார்ச் 13 (13/03/2023)  தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (15/03/2023)  இரண்டாவது தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையில் நடந்த இரு தேர்வுகளையும் 50,000 பேர் எழுதவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஊடகங்களில் இது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.         தமிழ்நாட்டின் கல்வியைத் தொடர்ந்து கவனித்துவரும் எவருக்கும் இது அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது“+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை”-ஐ படிப்பதைத் தொடரவும்.