பரண் 0009 தப்பாட்டம்: அகமும் புறமும்

பரண் 0009 தப்பாட்டம்: அகமும் புறமும் -மு.சிவகுருநாதன் ஓர் முன் குறிப்பு: வட்டார வழக்குகளை மொழிப்பிரயோகங்களை அதிகார வர்க்கம் இழிவானது என்று ஒதுக்கியே வந்துள்ளது. சோலை சுந்தரபெருமாளின் நாவல்கள், சிறுகதைகள் ஆகியன கல்லூரி, பல்கலை பாடநூல்களில் இடம்பெறுவது பல நேரங்களில் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிறது. சோலை சுந்தரபெருமாள் நாவல்களில் பல மாற்றுக் கருத்துக்கள் உள்ளபோதிலும் வட்டார வழக்கு உள்ளிட்ட சில அம்சங்களுக்காக அவருடைய நாவல்களை நேர்மறையாக அணுகும்முறையை பல தடவை கடைபிடித்துவந்திருக்கிறேன். ஆனால் அவரது சமீபத்திய நாவல்களான மரக்கால், தாண்டவபுரம்“பரண் 0009 தப்பாட்டம்: அகமும் புறமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்

பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்                                                                               – மு.சிவகுருநாதன் (வட்டார வழக்கில் எழுதப்படுகிற படைப்புகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பாடமாக வைக்க மறுத்து வருகின்றன. அப்படி பாடமாக வைக்கப்பட்டாலும் பின்னாட்களில் எதிர்ப்பு வருகின்றது என்கிற பெயரில் அவைகள் நீக்கப்படுகின்றன. தொன்னூறுகளின் இறுதியில் சோலை சுந்தரபெருமாளின் ‘ஒரே ஒரு ஊர்ல…’ என்ற நாவல் ஒர் கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையொட்டி இக்கடிதம் தினமணிக்கு எழுதப்பட்டது. ஆனால் தினமணி வெளியிடவில்லை. பிறகு ‘கேப்பியார்’ இதழில் வெளிவந்தது.“பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்

பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்                                                                                                           –மு.சிவகுருநாதன் (14.05.2012 அன்று திருவாருரில் நடைபெற்ற சோலைசுந்தரபெருமாளின் ‘தாண்டவபுரம்’ நாவல் கருத்தரங்கம் குறித்த பதிவு.) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் (தமுஎகச) சார்பில் 14.05.2012 அன்று திருவாருர் காமராசர் திருமண அரங்கில் சோலை சுந்தரபெருமாளின் ‘தாண்டவபுரம்’ நாவல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச மாவட்டத்தலைவர் கு.வேதரத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமுஎகச கிளைச்செயலாளர் கவிஞர் மனிதநேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமுஎகச“பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகில் முன் தோன்றியது தமிழும் தமிழ் நாகரிகமும் தான்!

உலகில் முன் தோன்றியது தமிழும் தமிழ் நாகரிகமும் தான்! மு.சிவகுருநாதன் திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய இலக்கியச் சந்திப்பு நிகழ்வு நேற்று (04.02.2012) மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதி கெளரிசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் பொதுச்செயலர் புலவர் எண்கண் சா.மணி வரவேற்றுப் பேசினார். நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் தனது தலைமையுரையில் அரங்கில் கூட்டம் குறைவாக உள்ளதைக் குறிப்பிட்டு“உலகில் முன் தோன்றியது தமிழும் தமிழ் நாகரிகமும் தான்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெண்மணி நினைவு தினமும் நூல் வெளியீடும்

வெண்மணி நினைவு தினமும் நூல் வெளியீடும் -மு.சிவகுருநாதன் வெண்மணிப்படுகொலையின்   42 -வது  நினைவு தினம்  டிசம்பர்,25 ,2010 வெண்மணிப்போராளிகளின் அஞ்சலிக்கூட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ‘வெண்மணி’ என்ற காலாண்டிதழும் சோலை சுந்தரபெருமாள் தொகுத்த ‘வெண்மணியிலிருந்து…’ என்ற வாய்மொழி வரலாற்று நூல் தொகுப்பும் வெளியிடப்பட்டது.

நந்தன் கதை: ஒரு மறுவாசிப்பு மு. சிவகுருநாதன்

நந்தன் கதை: ஒரு மறுவாசிப்பு மு. சிவகுருநாதன் வரலாற்றுக்கும் புனைவுக்குமான இடைவெளி சொல்லப்பட்ட / எழுதப்பட்ட / தொகுக்கப்பட்ட அல்லது சொல்லப்படாத / எழுதப்படாத / தொகுக்கப்படாத வரலாற்றின் இடைவெளியைப் போன்றது தான். புனைவுகளே வரலாறாக கட்டமைக்கப்பட்டிருக்கிற நிலையில் வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யவும், மறுவாசிப்பு செய்யவும் புனைவுகள் பெரும்பங்காற்ற முடியும். பழம் புனைவுகளை கேள்விக்குட்படுத்துவதும், புதுப்புனைவுகளை உருவாக்குவதும் வரலாற்றின் இடைவெளிகளைக் கடக்க / நிரப்ப பெரிதும் பயன்படும். அக்னியில் ஆகுதி பெய்து கடவுளை வழிபடும் வழக்கமுடையவர்கள்“நந்தன் கதை: ஒரு மறுவாசிப்பு மு. சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.