எல்லைக்கோடுகளின் பாசிசம்!

எல்லைக்கோடுகளின்  பாசிசம்! மு.சிவகுருநாதன்        கொரோனா உலகைப் புரட்டிப் போட்டுள்ளது. உலகமய ஏகாதிபத்தியம் இதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது; வருங்காலத்தில் இன்னும் மேலதிகமாகவும் பயன்படக்கூடும். எதையும் பணமாக மாற்றுவதே முதலாளித்துவத்தின் வேலை, அதற்கு கொரோனாவும் விதிவிலக்கல்ல. வணிகத்திற்கு தேச எல்லைகளே இல்லை என்கிறது; கொரோனா மாவட்ட எல்லைகளை மூடுகிறது.      அரசுகளுக்குக் கூட கொரோனா வெகுமதி என்றே சொல்ல வேண்டும். ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு, எட்டுமணி நேர வேலை உரிமை பறித்தல்“எல்லைக்கோடுகளின் பாசிசம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக் குழப்பங்கள் நூல் விமர்சனம்

கல்விக் குழப்பங்கள் நூல் விமர்சனம்   (வாட்ஸ் அப்பில் வந்த தோழர் இராமமூர்த்தி நாகராஜன் அவர்களின் நூல் விமர்சனமும் எனது பதிலும் இங்கு வெளியாகிறது. நன்றி: இராமமூர்த்தி நாகராஜன்)   கல்வி நூல் வரிசை புத்தக அறிமுகம்: 16 புத்தகத் தலைப்பு: கல்விக் குழப்பங்கள் நூலாசிரியர்: மு.சிவகுருநாதன்   விமர்சனம்: இராமமூர்த்தி நாகராஜன். ramsai01@gmail.com சாப்பிடுதல் என்பது உடல் வளத்திற்கு மிக முக்கியமானது. இதில் சமைப்பவர், உண்பவர் என்பவர்களைத் தாண்டி எதைச் சமைக்கிறோம் என்பது மிக முக்கியமானது.“கல்விக் குழப்பங்கள் நூல் விமர்சனம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சாரு நிவேதிதா – நண்பர்கள் – விமர்சனங்கள்

சாரு நிவேதிதா – நண்பர்கள் – விமர்சனங்கள் -மு. சிவகுருநாதன் முன்பொரு சமயம் அ. மார்க்ஸ் சாருவைப் பற்றி எழுதும்போது “கடைசி பியர் வாங்கிக் கொடுப்பவன்தான் சாருவுக்கு  மிகச் சிறந்த எழுத்தாளன்” என்று குறிப்பிட்டிருந்தார்.  அதை சாரு நிவேதிதா மிகுந்த அறச்சீற்றத்துடன் எதிர்கொண்டார்.  இருப்பினும் சாரு இக்கூற்றை நிருபித்துக் கொண்டேயிருக்கிறார்.   இப்பொழுது மிஷ்கின் படமான ‘நந்தலாலா’ விமர்சனம் வரையிலும் அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பொதுவாக சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் வாசகர்களிடம்  கிளர்ச்சியையும் வாசிப்பனுபவத்தையும் ஏற்படுத்தக் கூடியவை.   சாருவின்“சாரு நிவேதிதா – நண்பர்கள் – விமர்சனங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.